சித்த மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. 308 மாணவர்களுக்கு சீட் !!

Posted By:

சென்னை: சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சித்த மருத்துவத்துக்கான கவுன்சிலிங் தொடங்கியதையடுத்து 308 மாணவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேர வகை செய்யும் கவுன்சிலிங் சென்னையில் நேற்று தொடங்கியது.

முதல் நாளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 247 மாணவர்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 61 மாணவர்களுக்கும் என மொத்தம் 308 பேருக்கு அட்மிஷன் கடிதம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), இயற்கை-யோகா மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.), ஹோமியோபதி (பி.எச்.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகளில் இந்த மாணவர்கள் சேர்வர்.

சித்த மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. 308 மாணவர்களுக்கு சீட் !!

இதற்கான கவுன்சிலிங் சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவ முறை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய மருத்துவ முறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 356 இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 743 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,099 இடங்களை நிரப்ப இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.

1.031 மாணவர்களுக்கு அழைப்பு

கவுன்சிலிங்கின் முதல் நாளான நேற்று கட்-ஆஃப் மதிப்பெண்கள் 197 முதல் 184 வரை பெற்ற 1,031 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

சிறப்புப் பிரிவினர்

மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 18 இடங்களில் கவுன்சிலிங் மூலம் சேர்க்க 137 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 18 இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. 308 மாணவர்களுக்கு சீட் !!

ஆர்வம்

சென்னை-அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 60 பி.எஸ்.எம்.எஸ். இடங்களில், 58 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் 2 காலியிடங்கள் (எஸ்சிஏ-1; எஸ்.டி.-1) மட்டுமே தற்போது உள்ளன.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களுக்கு 88 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் 12 காலியிடங்கள் (எஸ்.சி.-8; எஸ்சிஏ-3; எஸ்டி-1) உள்ளன.

கோட்டாறு

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 60 பி.ஏ.எம்.எஸ். இடங்களில், 38 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் 22 காலியிடங்கள் (பி.சி.-4; எம்.பி.சி.-7; எஸ்.சி.-8; எஸ்சிஏ-2; எஸ்.டி.-1) உள்ளன.

அரசு இயற்கை-யோகா மருத்துவக் கல்லூரி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு இயற்கை-யோகா மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 60 பி.என்.ஓய்.எஸ். இடங்களில், 15 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் 45 காலியிடங்கள் (ஓ.சி.-5; பி.சி.-14; பி.சி.எம்.-2; எம்.பி.சி.-12; எஸ்.சி.-9; எஸ்.சி.ஏ.-2; எஸ்.டி.-1) உள்ளன.

சித்த மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. 308 மாணவர்களுக்கு சீட் !!

ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி

மதுரை அருகே திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 50 பி.எச்.எம்.எஸ். இடங்களில் 42 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் 8 காலியிடங்கள் (எஸ்.சி.-7; எஸ்சிஏ-1) உள்ளன.

அரசு யுனானி மருத்துவக் கல்லூரி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 26 பி.யு.எம்.எஸ். இடங்களில், 3 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கல்லூரியில் 23 காலியிடங்கள் (ஓ.சி.-5; பி.சி.-7; பி.சி.எம்.-1; எம்.பி.சி.-5; எஸ்.சி.-4; எஸ்சிஏ-1) உள்ளன.

சித்த மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. 308 மாணவர்களுக்கு சீட் !!

21 சுயநிதிக் கல்லூரிகள்

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகள் 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் 743 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும் கவுன்சிலிங் நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

வரும் 28-ஆம் தேதி வரை கவுன்சிலிங்

English summary
308 students has got Indian medicine education medical seats. The counselling for the Indian medicine college has begin yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia