வேளாண் படிப்புகளுக்கான இரண்டாம் கலந்தாய்வு நடைபெறுகிறது

Posted By:

தமிழகத்தில்  வேளாண் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது முதல்கட்ட கலந்தாய்வு ஜீன் 19 முதல் 2 வரை நீட் தேர்வு சிக்கல்களுக்கிடையே வெற்றி கரமாக நடத்தப்பட்டது . வேளாண் மாணவர்களுக்கான வகுப்பு நாட்கள்  குறித்து சரியாக   இருக்க விதிமுறைகளின் படி காலதாமதமில்லாமல் நடைபெற்றது . ஆனால் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு பின் வைக்க திட்டமிட்டது .

வேளாண் இரண்டாம் கட்டகலந்தாய்வுக்கு பின் ஆகஸ்ட் 31 நாள் நடைபெறுகிறது

தமிழகத்தில் தற்பொழுது வேளாண் பல்கலைகழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற வேண்டிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 28 ஆம் நாள் முதல் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது .
வேளாண் பல்கலைகழகத்தில் 1627 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் .

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் 14 உறுப்பு கல்லுரிகள் மற்றும் 19 இணைப்பு கல்லுரிகள் உள்ள நிலையில் இவற்றில் வேளாண்மைக்கான 13 பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 2820 இடங்களில் 2156 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. மொத்தம் உள்ள இடங்களில் கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய அரசு கல்லுரிகளுக்கான் இடங்களில் ஒசி, பிசி, எம்பிசி பிரிவினருக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.

இதனையடுத்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 31 ஆம் நாள் துவங்குகிறது. முதல் நாளில் 218 பேர் பங்கேற்றனர். இன்று வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறுகிறது. வேளாண்மை படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் மாணவர்களுக்கான முதல் பருவ வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன .

மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்களுக்கான வகுப்புகளும் ஆகஸ்ட் 31 ஆம் நாள் தொடங்கவதற்கான அறிவிப்புடன் நடைபெறுவதால் . வேளாண் படிப்புகளுக்கான வேகம் சீரான முறையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது . மாணவர்களும் கவுன்சிலிங் முடிந்த கையோடு கல்லுரிக்கு உடனடியாக இந்த வாரத்திலேயே தயாராக வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்:

வேளாண் பல்கலைகழகத்தின் இரண்டாம்கட்ட கலந்தாய்வு விரைவில்!!! 

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மெடிக்கல் கவுன்சிலிங் !!!!

English summary
here article tell about second stage of counselling for agriculture studies

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia