இந்த ஆண்டிலும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கு முக்கியத்துவம் தந்த மாணவர்கள்!!

Posted By:

சென்னை: நடப்பாண்டிலும் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் வளாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய 2 ஆண்டுகளிலும் மெக்கானிக்கல் பிரிவிலேயே மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்தனர்.

இந்த ஆண்டிலும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கு முக்கியத்துவம் தந்த மாணவர்கள்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒற்றைச் சாளர முறைப்படி மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங்கை நடத்தி சேர்க்கையை வழங்கி வருகிறது அண்ணா பல்கலைக்கழகம்.

கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கிய கவுன்சிலிங் ஜூலை 28-ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவு பி.இ. படிப்பை அதிக அளவிலான மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மெக்கானிக்கல் பிரிவு முதலிடத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மெக்கானிக்கல் பிரிவுதான் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2013-ல் மெக்கானிக்கல் பிரிவை 28,010 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் (இசிஇ) பிரிவை 22,449 பேரும், கட்டுமான பொறியியல் பிரிவை 15,655 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,423 பேரும் தேர்வு செய்தனர்.

2014-ல் மெக்கானிக்கல் பிரிவை 26,770 பேரும், மின்னணுவியல் தொடற்பியல் (இசிஇ) பிரிவை 19,012 பேரும், கட்டுமான பொறியியல் பிரிவை 17,010 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,987 பேரும் தேர்வு செய்தனர்.

நடப்புக் கல்வியாண்டில் மெக்கானிக்கல் பிரிவை 25,355 பேர் தேர்வு செய்திருக்கின்றனர். இதில் 366 பேர் மாணவிகள் ஆவர். அடுத்ததாக மின்னணுவியல் தொடற்பியல் (இசிஇ) பிரிவை 18,069 பேரும், கணினி அறிவியல் பிரிவை 14,538 பேரும், கட்டுமான பொறியியல் பிரிவை 14,303 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.

தமிழ் வழி பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை தமிழ் வழி இயந்திரவியல் பிரிவில் மொத்தமுள்ள 719 இடங்களில் 278 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. கட்டுமான பொறியியல் பிரிவில் இடம்பெற்றுள்ள 660 இடங்களில் 280 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.

English summary
More than 25 Thousand students has got admission letters to join BE Mechanical group in this academic year, Chennai Anna University counselling centre officials told.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia