பிளஸ்டூ வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில் காப்பி.. 25 மாணவர்கள் சிக்கினர்!

Posted By:

சென்னை : தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். தொடர்ச்சியாக 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன.

நேற்றைய தினம் (13.03.2017) வேதியியல், கணக்குப்பதிவியல் போன்ற தேர்வுகள் நடை பெற்றன. வேதியியல் தேர்வில் காப்பி அடித்த 17 மாணவர்கள் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வில் காப்படி அடித்ததாக 8 மாணவர்களும் நேற்று பிடிபட்டனர். வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிளஸ்டூ வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வில் காப்பி.. 25 மாணவர்கள் சிக்கினர்!

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வந்த மகரிஷி வித்யாமந்திர் மற்றும் கிரெசன்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது அத்துடன் தேர்வு எழுத நேரம் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் 1 மார்க் கேள்விகள் பாடப்புத்தகத்தின் பின் பகுதியில் உள்ளவைகள் மட்டும் கேட்கப்படாமல் பாடப்பகுதியின் உட்புறம் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் சற்று கடினமாக இருந்தது. 3 மார்க் கேள்விகளும் நீண்ட அளவில் பதில் அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. 5 மார்க் கேள்விகளும் பெரிய அளவில் பதில் அளிக்கும் விதத்தில் இருந்ததால் தேர்வு எழுதுவதற்கு போதுமான நேரம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

நேற்று நடந்த வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வில் காப்பி அடித்த 25 மாணவர்களில் 14 பேர் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் 11 பேர் தனித்தேர்வர்கள். வேதியியல் தேர்வில் 17 பேர் கணக்குபதிவியல் தேர்வில் 8 பேரும் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.

திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 5 மாணவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 4 மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த 1 மாணவர், சேலம் மாவட்டத்தைச் சார்ந்த 1 மாணவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 1 மாணவர், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 1 மாணவர், மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 1 மாணவர் அனைவரும் காப்பி அடித்ததற்காக பிடிக்கப்பட்டனர். மேலும் விழுப்புரம் மாவட்டங்களில் 4 தனித்தேர்வர்களும், சென்னை மாவட்டத்தில் 3 தனித் தேர்வர்களும் பிடிபட்டனர்.

காப்பி அடித்ததற்காக பிடிபட்ட மாணவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

English summary
yesterday 12th class chemistry and accountancy exams done. 25 students caught cheating in chemistry and accountancy exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia