புலம்பெயர்ந்த இந்திய மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த வேலைவாய்ப்பு

Posted By:

சென்னை: புலம்பெயர்ந்த இந்திய மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த வாய்ப்பை இந்திய அரசு வழங்குகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவி மையம்(ஓஐஎஃப்சி), மத்திய அரசு, இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) ஆகியவை இணைந்து இந்த இன்டர்ஷிப் திட்டத்தை வழங்குகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மண்டல பிரவாசி பாரதிய திவாஸ்

நிகழ்ச்சியின்போது இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.

புலம்பெயர்ந்த இந்திய மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த வேலைவாய்ப்பு

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த 23 பெரிய நிறுவனங்கள் அளித்த இன்டர்ஷிப் வாய்ப்பை புலம்பெயர்ந்த இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

அப்பல்லோ மருத்துவமனை, ப்ளூ ஸ்டார், பிளிப்கார்ட், போர்ப்ஸ் மார்ஷல், கோத்ரஜ் கம்பெனி, இன்போஸிஸ், கிர்லோஸ்கர், டாடா குரூப் கம்பெனிகள், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த இன்டர்ஷிப் வேலைவாய்ப்பை அளித்தன.

English summary
The Overseas Indian Facilitation Centre (OIFC) set up by the Indian government in partnership with the Confederation of Indian Industry (CII) has launched the India Corporate Internship programme for Indian diaspora students during the Regional Pravasi Bhartiya Diwas in Los Angeles in November 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia