எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களைப் பெற குவிந்த மாணவச் செல்வங்கள்!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு பயில்வதற்காக விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மாணவச் செல்வங்கள் குவிந்துவிட்டனர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களைப் பெற குவிந்த மாணவச் செல்வங்கள்!!

சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம் கடந்த மே 26-ஆம் தேதி முதல் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாள்களில் மொத்தம் 23,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுவிட்டனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாலே போதும்.

அனைத்து இடங்களிலும் திங்கள்கிழமை (ஜூன் 6) மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் ஜூன் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர ஜூன் 7 கடைசி நாளாகும். இதுவரை 14,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பத்துடன் சான்றொப்பம் இட்ட பிளஸ் 2 தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணைத்து அனுப்பலாம்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சென்னையில் வரும் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

English summary
More than 23,000 MBBS, BDS application has been sold in the Last 10 days in Tamilnadu. The ranking list for MBBS, BDS courses will be released on June 17.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia