தமிழக மாணவர்கள் கல்வி பெற இதுவரை 22 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்!

Posted By:

சென்னை: தமிழக மாணவ, மாணவிகள் தங்களது கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ள வசதியாக இதுவரை தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்கள் கல்வி பெற இதுவரை 22 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்!

தமிழக சட்டசபையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளிக்கையில் இத்ததகவலை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டசபையில் அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மிகச் சிறந்த திட்டமாக, விலையில்லாத மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை மொத்தம் 33 லட்சத்து 19 ஆயிரத்து 866 கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அதில், 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 வழங்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு, ஐந்தாம் கட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 லட்சம் மடிக்கணினிகள், டிசம்பருக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.

மடிக்கணினி திட்டத்தால் மாணவ, மாணவி வெகுவாகப் பயன் அடைந்துள்ளனர். அவர்களது அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவும் சாதனமாக மடிக்கணினி அமைந்துள்ளது என்றார் அவர்.

English summary
22 lakh students has got laptop computers, Tamilnadu IT minister Mukkur N. Subramanian has announced in the Tamilnadu Legislative Assembly yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia