நீட் தேர்வு விடைத்தாள் வெளியீடு.. விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு.!

Posted By:

சென்னை : நீட் தேர்வு முடிவு வெளியிடலாம் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இன்று நீட் தேர்வு விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, விடைத்தாளில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கான விடைகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நீட் தேர்வு விடைத்தாள் வெளியீடு.. விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் சிபிஎஸ்இ அறிவிப்பு.!

விடைத்தாளில் ஆட்சேபணை இருந்தால் இன்று அல்லது நாளை மாலைக்குள் சிபிஎஸ்இக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1000/- கட்டடணம் செலுத்தி கருத்து தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவு வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகு இன்று நீட் விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

English summary
The CBSE Announced that Neet Exam Answer Key Released today at www.cbseneet.nic.in.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia