சென்னை: இரண்டு வயதில் 35 கணித வடிவங்களைக் கூறி அசத்துகிறார் தமிழகத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமியான ஆலியா ஷாகுல் ஹமீது.
கணித வடிவங்கள்
இந்த கணித வடிவங்களைக் கூறியதன் மூலம் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்தல்
கணித வடிவங்கள் மற்றும் கணித வடிவங்கள் அல்லாத பொருள்களை ஒரு நிமிடத்தில் நினைவுபடுத்திச் சொல்லுவதற்கான நிகழ்ச்சியை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.
அபுதாபியிலிருந்து வந்தார்
இந்த நிகழ்ச்சியில் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதிலுள்ள இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் பெற்றோர் தற்போது வசிப்பது ஐக்கிய அரசு எமிரேட் நாட்டிலுள்ள அபுதாபியில்.
ஃபரீதாபாத்
நிகழ்ச்சிக்காக ஃபரீதாபாத் வந்த ஆலியா, ஒரு நிமிடத்தில் 35 கணித வடிவங்கள் மற்றும் கணித வடிவங்கள் அல்லாத பொருட்களைக் கூறி அசத்தல் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் ஒரு பங்கேற்பாளர் 25 பொருட்களைக் கூறினாலே போதும்.
35 வடிவங்கள்
ஆனால் ஆலியா 35 பொருட்களைக் கூறி அசத்தல் சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 வயதில் சாதனை
கடந்த மாதம் 28-ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 2 வயதில் இந்தச் சாதனையை ஆலியா நிகழ்த்தியிருப்பதுதான் சிறப்பு.
குவியும் பாராட்டுகள்
சாதனையை நிகழ்த்தியுள்ள ஆலியாவுக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
பிஸ்வரூப்
இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனம் 2004-ல் டாக்டர் பிஸ்வரூப் ராய் சௌத்ரி என்பவரால் தொடங்கப்பட்டது. இவரும் ஒரு கின்னஸ் சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












