எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Posted By:

சென்னை: நடப்புக் கல்வியாண்டில் எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எம்பிஏ படிப்பதற்காக தங்கள் பெயரை மாணவர்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளதன் மூலம் இது தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.

ஆனால் மீண்டும் எம்பிஏ படிப்புக்கு மவுசு கூடியுள்ளது. குறிப்பாக 2015-ம் ஆண்டில் பெரும்பாலான எம்பிஏ கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. குறிப்பாக ஆசிய-பசுபிக் மண்டப் பகுதியில் எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாகியுள்ளது.

எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2014-ல் எம்பிஏ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 55 சதவீதம் அதிகரித்தது. இது 2015-ல் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஃபிளேம் பல்கலைக்கழக துணைவேந்தர் தேவி சிங் கூறியதாவது: எம்பிஏ படிப்புக்கு எப்போதுமே மவுசு இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் இந்தப் படிப்புகளில் படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது மீண்டும் இந்த படிப்புக்கு மவுசு கூடியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia