அரசு வேலைவாய்ப்பு முகாமில் 17 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கி சாதனை

Posted By:

சென்னை: தமிழக அரசு சார்பில், நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 17 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. சென்னை ஆர்.கே.நகரில் அரசு சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

58 ஆயிரம் பேர் பங்கேற்பு

இதில் சுமார் 58 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி நியமன உத்தரவு அளிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய முகாம்

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில், அரசு சார்பில் இந்த மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

துறைமுக மைதானம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட துறைமுக மைதானத்தில் இந்த முகாம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

சிறப்பு ஏற்பாடுகள்

ஏராளமான இளைஞர்கள் இந்த முகாமுக்கு வரத் தொடங்கினர். அவர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், சுங்கச்சாவடி, கிராஸ் சாலை சந்திப்புகளிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அந்தப் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வழிகாட்டி காகிதம்

முகாம் நடைபெற்ற மைதானத்துக்குள் இளைஞர்கள் நுழைந்தவுடன் அவர்களின் கைகளில் வழிகாட்டி காகிதங்கள் வழங்கப்பட்டன. அதில், முகாமில் வேலை அளிக்கும் 358 நிறுவனங்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. தங்களுக்குத் தேவையான நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் சென்றனர்

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

11 மாற்றுத் திறனாளிகள்: ஆட்டோமொபைல்-உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான டி.வி.எஸ்., ரானே உள்ளிட்டவை பெரும்பாலான இளைஞர்களிடம் தன்விவரப் பட்டியலைப் பெற்றுக் கொண்டன. சில தகுதியான இளைஞர்களுக்கு அங்கேயே வேலை வழங்குவதற்கான உத்தரவுக் கடிதமும் அளிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு இயக்ககம்

இதுதொடர்பாக மாநில அரசின் வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நியமன உத்தரவு

இந்த மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமில் 58 ஆயிரத்து 835 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 6 ஆயிரத்து 453 பேருக்கு இறுதிப் பணி நியமன உத்தரவுகளும், 10 ஆயிரத்து 642 பேருக்கு தாற்காலிக பணி நியமன உத்தரவுகளும் வழங்கப்பட்டன. சுமார் 17 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் சேர...

திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில் சேர 14 ஆயிரத்து 392 பேர் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து ஆயிரத்து 57 பேர் பதிவு செய்தனர்.

மாற்றுத் திறனாளிகள்

மேலும், மாற்றுத் திறனாளிகளில் 11 பேருக்கு வேலைக்கான அரசு உத்தரவு அளிக்கப்பட்டது.
டிப்ளமோ படித்தவர்கள்: வேலைவாய்ப்பு முகாமில், டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
17 Thousand youth has got jobs in job fair. which is arranged by State Government. More than 58 thousand people has participaqted in the job fair.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia