தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 பணியிடங்கள்..!

Posted By:

சென்னை : தமிழ் நாடு அரசு பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வரகிறது. இந்த அமைப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை பணி நியமனம் செய்கிறது. தற்போது அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 1663 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்விப் பிரிவு வாரியாக உள்ள பணியிடங்கள் விபரம் - தமிழ் 218, ஆங்கிலம் 231, கணிதம் 180, இயற்பியல் 176, வேதியியல் 168, தாவரவியல் 87, விலங்கியல் 102, வரலாறு 146, புவியியல் 18, பொருளாதாரம் 139, வணிகவியல் 125, அரசியல் அறிவியல் 24, பயோ கெமிஸ்ட்ரி 1, மைக்ரோ பயாலஜி 1, ஹோம் சயின்ஸ் 7, தெலுங்கு 1, உடற்கல்வி இயக்குனர் 39. ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 

தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1663 பணியிடங்கள்..!

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.07.2017ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்புடன் பி.எட் ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ. 500/- எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ. 250/. கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2017ந் தேதியாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான எழுத்துத் தேர்வு 02.07.2017ந் தேதி நடைபெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு www.trb.tn.nic.in மற்றும் www.trbonlineexams.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English summary
Teacher Examination Board has been appointed to select teachers to select qualified teachers for the Tamil Nadu Government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia