அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி இவர்தான்...!!!

Posted By:

சென்னை: அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி என்ற பட்டத்தை 15 வயதான சிறுமி ஹன்னா ஹெர்ப்ஸ்ட் வென்றுள்ளார்.

போட்டி

டிஸ்கவரி எஜுகேஷன் 3எம் இளம் விஞ்ஞானி சவால் என்ற பெயரில் இளம் விஞ்ஞானி பட்டத்துக்கான போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

நிலையான மின்சார ஆதார கருவி

வளர்ந்து வரும் நாடுகளில் நிலையான மின் ஆதாரத்தை உருவாக்குவதற்கான புரோட்டோடைப் மெஷினை உருவாக்குவதுதான் இந்த போட்டி.

விஞ்ஞானி பட்டம்

இந்த போட்டியில் 15 வயதான ஹன்னா வெற்றி பெற்று அமெரி்க்காவின் இளம் விஞ்ஞானி பட்டத்தை வென்றுள்ளார்.

25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்

இதற்காக இவருக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கோஸ்டா ரிகா போன்ற நகரங்கலுக்கு சாதனைப் பயணம் சென்று வருவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

9-வது கிரேடு படிப்பு

ஹன்னா ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள ஃப்ளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக உயர்நிலைப்பள்ளியில் 9-வது கிரேடு படித்து வருகிறார்.

மின்னோஸ்டாவிலுள்ள செயின்ட் பால் நகரிலுள்ள 3எம் இன்னோவேஷன் மையத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

 

இறுதியாக 10 பேர்

இந்த போட்டியில் இறுதியாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தோ-அமெரிக்காவைச் சேர்ந்த ராகவ் கணேஷ், கிருஷ்ணா ஷெட்டி, சஞ்சனா ஷா, ஐரிஷ் குப்தா, அமுல்யா கரிமெல்லா உள்ளிட்டோரும் தேர்வாகினர். இதில் ஹன்னா வெற்றி பெற்று பரிசைத் தட்டிச் சென்றார்.

English summary
A 15-year-old US girl was crowned "America's Top Young Scientist" for producing an innovative prototype to help developing countries tap energy from ocean currents, a contest which had five Indian-American teens among the finalists. Hannah Herbst was named winner of the 2015 Discovery Education 3M young scientist challenge for creating a prototype that seeks to offer a stable power of source to developing countries by using untapped energy from ocean currents, local media reported.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia