எம்.பி.பி.எஸ் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்: 148 மாணவர்களுக்கு அட்மிஷன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற 3-வது எம்பிபிஎஸ் படிப்புக்கான 3-வது கட்ட கவுன்சிலிங்கில் 148 மாணவ, மாணவிகளுக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது.

எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர முன்னதாக 2 கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் ஆர்வம்

மாணவ, மாணவிகள் ஆர்வம்

இதைத் தொடர்ந்து காலியாக இருந்த எம்பிபிஎஸ் படிப்புகளில் மாணவ , மாணவிகளைச் சேர்க்க நேற்று சென்னை ஓமந்தூராரர் அரசு பல்நோக்கு சிறப்புமருத்துவமனை மையத்தில் 3-வது கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

2,379 பேருக்கு அழைப்பு

2,379 பேருக்கு அழைப்பு

இதில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற 2,379 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 583 பேர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து காலியாக இருந்த பெரும்பாலான இடங்களை மாணவ, மாணவிகள் தேர்வு செய்தனர்.

 

 

அரசு இடங்கள் நிரம்பின

அரசு இடங்கள் நிரம்பின

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த எம்.பி.பி.எஸ்.-மறு ஒதுக்கீட்டு இட்ங்கள் 20, சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இருந்த 12 காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 33 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன.

சேர்க்கைக் கடிதம்

சேர்க்கைக் கடிதம்

மொத்தம் 148 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.

 

 

111 சுயநிதி அரசு பி.டி.எஸ். காலியிடங்கள்

111 சுயநிதி அரசு பி.டி.எஸ். காலியிடங்கள்

இந்த நிலையில் சுயநிதி அரசு கல்லூரிகளில் 111 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

 

 

118 இடங்களுக்கு அட்மிஷன்

118 இடங்களுக்கு அட்மிஷன்

நேற்று நடைபெற்ற கவுன்சலிங்கின்போது சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 118 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. கவுன்சிலிங்கின் முடிவில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 111 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

23 கூடுதல் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்

23 கூடுதல் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்

69 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்பட்ட 27 முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில், 23 பேருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் 3-ஆம் கட்டக் கலந்தாய்வில் ஏற்படுத்தப்பட்டு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.

 

 

செப்டம்பர் 30-க்குள்...:

செப்டம்பர் 30-க்குள்...:

சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் வரும் 30-ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

4-ஆம் கட்டக் கலந்தாய்வு

4-ஆம் கட்டக் கலந்தாய்வு

அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் எம்.பி.பி.எஸ். இடங்கள், மீதம் உள்ள 111 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப 4-ஆம் கட்டக் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

 

 

உச்சநீதிமன்ற உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவு

கவுன்சிலிங் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேதிதிகள் முடிவு செய்யப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
148 Students has got admission letter to join in MBBS course in various Medical colleges in Tamilnadu. Tamilnadu Medical Education Selection committee Official has selected the students in the 3rd phase of MBBS counselling.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+