ஆசிரியர் கவுன்சலிங்: முதல் நாளிலேயே 1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்!!

Posted By:

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் மூலம் 1,310 பேர் டிரான்ஸ்பர் பெற்றனர். முதல் நாளிலேயே ஏராளமான ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் டிரான்ஸ்பர் பெற்று தங்களது சொந்த ஊர்களுக்குத் தயாராகி வருகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு டிரான்ஸ்பர் பெறுவதற்காக பள்ளி கல்வித்துறை கவுன்சிலிங்கை நடத்தி வருகிறது.

ஆசிரியர் கவுன்சலிங்: முதல் நாளிலேயே 1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்!!

இந்த கவுன்சிலிங் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கவுன்சிலிங்கின்போது மாவட்டத்துக்குள் டிரான்ஸ்பர் பெறும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த டிரான்ஸ்பர் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் டிரான்ஸ்பர்கள் வழங்கப்பட்டன. ஒரு மனமொத்த டிரான்ஸ்பர் வழங்கப்பட்டால் அது இரண்டு டிரான்ஸ்பர்களாக கணக்கில் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் இன்று நடைபெறவுள்ளது.

அதன்பிறகு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக புரமோஷன் செய்வதற்கான ஆன்-லைன் கவுன்சிலிங் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

English summary
The School education Department has conducted Counselling for the graduate Teachers. More than 1,300 teachers has got transfer.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia