13 வயதில் கூகுள் அறிவியல் விருதை வென்ற 'வில்லேஜ் விஞ்ஞானி'!!

Posted By:

சென்னை: 13 வயதில் கூகுள் அறிவியல் விருதை வென்று சாதனை படைத்துள்ளார் லலிதா பிரசிதா என்ற வில்லேஜ் விஞ்ஞானி.

சாதனை...

அறிவியல் துறையில் சாதிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டெல்லி பப்ளிக் பள்ளி...

இதில் தாமன்ஜோடியிலுள் டெல்லி பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவி லலிதா பிரசிதாவுக்கு கூகுள் அறிவியல் விருது கிடைத்துள்ளது. இவர் ஒடிசா மாநிலம் தாமன்ஜோடியைச் சேர்ந்தவர்.

விதிமுறை...

13 வயது முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்பதே கூகுள் நிறுவனத்தின் விதிமுறையாகும்.

காய்கறிகளை சுத்தம் செய்ய...

அறிவியலில் சமூக விளைவுப் பிரிவில் இந்த விருதுக்கு லலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறைந்த செலவில் காய்கறிகளை சுத்தம் செய்யும் திரவத்தைக் கண்டறிந்துள்ளார் லலிதா.

குறைந்த செலவில் திட்டம்...

இந்தத் திட்டத்தைத் தயாரித்து லலிதா பிரசிதா சமர்ப்பித்தார். அதற்காக அவருக்கு இந்த விருதை கூகுள் வழங்கியுள்ளது. குறைந்த செலவிலேயே உருவாக்கக் கூடிய பயோ அப்சார்பென்ட் என்ற பெயரில் இந்தத் திட்டத்தை அவர் தயாரித்துள்ளார்.

உர நச்சுத்தன்மையை நீக்க...

எளியமுறையிலும், குறைந்த செலவிலும் காய்கறிகளை இதன்மூலம் சுத்தம் செய்ய முடியும். அதாவது மண்ணில் விளையும் காய்கறிகளிலுள்ள வேதியல் உரங்களின் நச்சுத்தன்மையை இந்தத் திரவத்தில் கழுவுவதன் மூலம் வெளியேற்றி விட முடியும்.

குடிநீர் சுத்தகரிப்பு கருவி....

மேலும் இவர் தயாரித்த நீர் சுத்திகரிப்புக் கருவிக்காக அவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசும் கிடைத்துள்ளது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி, வீணாகும் சோளத்தைக் கொண்டு இயக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை....

இவரது தயாரிப்புகள் சுகாதாரமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததாகவும் இருப்பதால் கூகுள் இவருக்கு வெகுவாகப் பாராட்டுத் தெரிவித்து விருதை வழங்கியுள்ளது.

90 மண்டலங்கள்....

90 மண்டலங்களிலிருந்து பல்வேறு போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். கடைசியாக 20 பேர் இறுதிச் சுற்றுத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் லலிதா வெற்றி பெற்று விருதை வென்றுள்ளார்.

English summary
India's Lalita Prasida has bagged an award at the Google Science Fair in the the 'Google Community Impact' sub category. The 13-year-old from Odisha was nominated in the Community Impact category which is for projects that make a difference in the innovator's community by addressing environmental, health and resource management issues.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia