எம்எஸ், எம்டி கவுன்சலிங்... அரசு கல்லூரிகளில் இன்னும் 13 சீட் பாக்கி இருக்கு!

Posted By: Jayanthi

சென்னை: அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் 13 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளன.

எம்எஸ், எம்டி கவுன்சலிங்...  அரசு கல்லூரிகளில் இன்னும் 13 சீட் பாக்கி இருக்கு!

தமிழகத்தில் இயங்கும் 12 அரசு மருத்துவ கல்லூரகளில் எம்.எஸ், எம்.டி மற்றும் முதுநிலை பட்டியப்படிப்பு, முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்டிஎஸ் என மொத்தம் 585 இடங்கள் உள்ளன.

இவற்றில் இந்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்ப்பதற்கு கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது. கவுன்சலிங்கில் 572 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இறுதியாக 13 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. அதில் ஏற்படும் காலி இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த இடங்களுடன் ஏற்கெனவே காலி ஏற்பட்டுள்ள 13 இடங்களையும் சேர்த்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதம் கவுன்சலிங் நடத்த மருத்து கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

English summary
There are 13 seats vacant during MS and MD counselling in govt medical colleges.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia