12ம் வகுப்புத் தேர்வு .. பிட் அடித்தும், காப்பி அடித்தும் சிக்கிய 14 மாணவர்கள்!

Posted By:

சென்னை : தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ச்சியாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எந்த வித ஒழுங்கீனச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுபவர்கள் கண்டுப் பிடிக்கப்பட்டால் வன்மையாகத் தண்டிக்கபடுவார்கள் எனவும் கூறியுள்ளது.

12ம் வகுப்புத் தேர்வு .. பிட் அடித்தும், காப்பி அடித்தும் சிக்கிய 14 மாணவர்கள்!

இதனையடுத்து நேற்று 10.03.2017 அன்று வணிகவியல் மனை அறிவியல் புவியியல் போன்ற தேர்வுக்ள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது. நேற்யை தேர்வில் 14 நான்கு மாணவர்கள் காப்பி அடித்து எழுதியுள்ளனர். காப்பி அடித்து எழுதிய மாணவர்கள் மாட்டிக் கொண்டனர். அவர்கள் தேர்வு மைய மேற்பார்வையாளரால் கண்டுப்பிடிக்கப்பட்னர்.

தனித் தேர்விற்காக விண்ணப்பித்திருந்த தனித் தேர்வர்கள் 10 பேரும் மற்றும் 4 பள்ளிக் கூட மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதில் மாட்டிக் கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 தனித்தேர்வர்களும் 2 பள்ளிக் கூட மாணவர்களும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனித் தேர்வர்களும் பிடிபட்டனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பள்ளிக்கூட மாணவர்களும் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 தனித்தேர்வரும் பிடிபட்டனர். ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 மாணவர்கள் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

English summary
director of government examinations tan. vasunthara devi said 12th grade exam, 14 students were caught engaging in abusive behaviour.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia