11-ம் வகுப்பில் சேரப் போகிறீர்களா...மாணவர்களே உங்களுக்கான அறிவிப்பு இதோ....!!

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பில் சேரப் போகும் மாணவர்களுக்கான புதிய அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. வரும் 13-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு மானியம் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. 10-ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் 11-ம் வகுப்பிலோ அல்லது டிப்ளமோ படிப்புகளிலோ (பாலிடெக்னிக்குகள் வழங்கும் படிப்புகள்), ஐடிஐ தரும் சான்றிதழ் படிப்புகளிலோ சேர்ந்து வருகின்றன.

இந்நிலையில்தான் 11-ம் மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் 13-ம் தேதி (வரும் திங்கள்கிழமை) முதல் தொடங்குகிறது.

11-ம் வகுப்பில் பல்வேறு பிரிவுகள் (குரூப்புகள்) உள்ளன. சயின்ஸ் குரூப் (முதலாவது குரூப்), பியூர் சயின்ஸ் குரூப், வொக்கேஷனல் குரூப், காமர்ஸ், கணக்குப் பதிவியல் குரூப் என பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.
எனவே, 11-ம் வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகள் எந்த குரூப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு செய்த பின்னர் பள்ளிக்குச் சென்று சேர்வது நல்லது.

11-ம் வகுப்பில் சேரப் போகிறீர்களா...மாணவர்களே உங்களுக்கான அறிவிப்பு இதோ....!!

பொறியியல் அல்லது மருத்துவப் படிப்புகளை விரும்புவோர் முதல் குரூப், மருத்துவம் சார்ந்த படிப்புகளை விரும்புவோர் அறிவியல் குரூப் (பியூர் சயின்ஸ்), வங்கி, சி.ஏ., ஆடிட்டர், கம்பெனி மேலாண்மை படிப்புகளை விரும்புவோர் 3-வது குரூப்பில் சேர்வதற்குத் தயாராகி வருகின்றனர்.
மேலும் பலர் டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளுக்குத் தயாராகி வருகின்றனர்.

வரும் 13-ம் தேதி அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் சேர்க்கை சிறந்த முறையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வரும் 13-ம் தேதி சேர்க்கை தொடங்கவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.

தற்போது கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளியில் நடைபெறும் சேர்க்கைப் பணிக்கு வர வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகள், பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, " சென்னையில் 35 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படும். அதனை பூர்த்தி செய்து மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் கொடுக்க வேண்டும்.

மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் அதில் கேட்கப்படும்.
மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தகுந்த குரூப் ஒதுக்கப்படும். அதே பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமல்லாமல், வேறு பள்ளிகளில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லாத அளவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்" என்றார். சேர்க்கைகாக சிறந்த ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் தமிழக கல்வித்துறை சார்பில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Board of Secondary Education (TNBSE) is a part of Department of Education, Government of Tamil Nadu has announced the admission dates for 11th Class. For more details students can login into http://www.dge.tn.gov.in/.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+