1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை : 2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அற்கான பட்டியல் 10 மார்ச் 2017ம் தேதி வெளியிடப்படும்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரிர் தகுதித் தேர்வு வாரியத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்விதி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே 2012,13 மற்றும் 14ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1111 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.எட் படித்த வருடத்திலேயே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், ஏற்கெனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு வராதவர்கள் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது பணித் தெரிவுக்குரிய தகுதியினைப் பெறாமல் தற்போது தகுதியைப் பெற்றிருப்பவர்கள் ஆகியோர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்து உள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 10 மார்ச் 2017ம் ஆண்டு வெளியிடப்படும். அந்தப் பட்டியல் ஆன்லைனில் 20ம் தேதி வரை இருக்கும் அதனை நீங்கள் சரிப்பார்த்துக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

மேலும் தகவல் பெற www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
teachers examination board has announced that 1111 graduate teachers appointed as job.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X