சத்தீஸ்கரில் காத்திருக்கும் 11 ஆயிரம் விரிவுரையாளர் பணியிடங்கள்!!

Posted By:

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான விரிவுரையாளர் பமியிடங்கள் காலியாகவுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில சட்டப் பேரவையில் பாஜக எம்.எல்.ஏ சந்தோஷ் பாப்னா எழுப்பிய கேள்விக்கு அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் கேதார் காஷ்யப் அளித்த பதில்:

சத்தீஸ்கரில் காத்திருக்கும் 11 ஆயிரம் விரிவுரையாளர் பணியிடங்கள்!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் 2,112 முதல்வர் பணியிடங்கள், 11,658 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம்ா 3,966 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

அந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பலோதாபசார் மாவட்டத்திலுள்ள பள்ளிகில் 175 முதல்வர் பணியிடங்களும், ராஜ்னந்தகாவோன் மாவட்டத்தில் 145 பணியிடங்களும், காங்கெர் மாவட்டத்தில் 144 பணியிடங்களும், பாஸ்டர் மாவட்டத்தில் 124 பணியிடங்களும், பாமெத்ராவில் 123 பணியிடங்களும், கபீர்தாம் மாவட்டத்தில் 122 பணியிடங்களும், கொண்டகாவோன் மாவட்டத்தில் 114 பணியிடங்களும், மகாசமுந்த் மாவட்டத்தில் 111 பணியிடங்கலும், ராஜ்கர் மாவட்டத்தில் 97 பணியிடங்களும், கொரியாவில் 93 பணியிடங்களும், சூரஜ்பூர் மாவட்டத்தில் 89 பணியிடங்களும், ஜாஸ்பூர், தமாத்ரி ஆகிய மாவட்டத்தில் தலா 88 பணியிடங்களும் காலியாகவுள்ளன என்றார் அவர்.

English summary
Chhattisgarh government today said 2,112 posts of principal and 11,658 positions of lecturer are lying vacant in high schools and higher secondary schools of the state. In a written reply to the question of BJP MLA from Jagdalpur constituency Santosh Bafna, School Education Minister Kedar Kashyap informed the Assembly, "A total of 3,966 high schools and higher secondary schools are operational in Chhattisgarh." "Out of the 3,966 sanctioned posts of principals in these schools, 2,112 posts are still vacant. Similarly, of 36,220 posts of lecturers, 11,658 are lying vacant," he said, adding "Efforts are underway to fill the vacant posts."

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia