2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..!

Posted By:

சென்னை : நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..!

தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள்

ஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள்

ஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள்

ஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள்

ஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம்

ஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல்

ஜூலை 5ந் தேதி - பகுதி III - சமூக அறிவியல்

ஜூலை 6ந் தேதி - பகுதி IV - விருப்ப மொழிப் பாடம்

English summary
Above mentioned article about 10th special sub exam details and time table details.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia