10,38,022 மாணவ மாணவியர்.. 3371 தேர்வு மையங்கள்.. களை கட்டிய 10ம் வகுப்பு தேர்வு!

சென்னை : அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அனைவரும் இணைந்து செயல்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வினை தமிழகம் முழுவதும் 10லட்சத்து 38ஆயிரத்து 22 மாணவ மாணவியர்கள் எழுதுகிறார்கள்.தமிழகம் முழுவதும் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

10,38,022 மாணவ மாணவியர்.. 3371 தேர்வு மையங்கள்.. களை கட்டிய 10ம் வகுப்பு தேர்வு!

 

தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 619721 மாணவ மாணவியர்கள் தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதுகிறார்கள்.

6403 பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். தேர்வின் போது எந்ந வித முறைக் கேடும் நடைபெறாமல் இருப்பதற்காக பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேர காவலர்கள் நியமிக்கப்பட்டு வினாத்தாள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வாய்பேச இயலாதவர்கள், காது கேளாதோர், கண்பார்வையற்றோர் போன்ற மாணவ மாணவியர்களும் தேர்வினை எழுதுகிறார்கள். மாணவர்கள் 2653 மாணவிகள்

1537 என மொத்தம் 4190 மாற்றுத் திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்வினை எழுதுகிறார்கள். இவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலைப் பாதிக்கப்பட்டவர்கள் திட திரவ உணவுகளை பிற மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உண்ணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதை மீறி பயன் படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10th std exam today. 498406 male students and 495792 female students write examination across tamilnadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X