10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு..!

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுடைய மதிப்பெண் பட்டியல் இன்று மாலை 5 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்று பின்னர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் பலர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மறுகூட்டல் முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு..!

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவினை மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண்களில் மாற்றமில்லாத தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பாடது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியர்களுடைய மதிப்பெண் பட்டியல் இன்று மாலை 5 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் மேலும் இந்த இணையதளத்திலிருந்து மாணவ மாணவியர்கள் தங்களுடைய தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

English summary
Above article mentioned about 10th grade retotal mark list details. 10th grade retotal result will be release today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia