பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவு வெளியீடு, பிளஸ்2 தனித்தேர்வு முடிவும் இன்றே!

Posted By:

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவு:

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . மாணவர்கள் தேர்வு எண்ணை பதிந்து தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவெண்ணை பதிந்து மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளை அடுத்து பிளஸ்2 மாணவர்களுக்கு மதியம் தேர்வு முடிவுகள்

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிபெண் சான்றிதழை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் மாணவர்கள் மதிபெண்கள் குறித்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க சிஇஓ அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் விடைத்தாள் பெறுவதற்குரிய தனிக்கட்டணத்தையும் மறுக்கூட்டலுக்குரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 மாணவர்கள் தனித்தேர்வு முடிவு:

பிளஸ் 2 மாணவர்களுக்கான தனித்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2மணிக்கு மாணவர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுகூட்டல் சம்மந்தமாக நவம்பர் 2 முதல் நவம்பர் 4 தேதி வரை காலை 11மணி முதல் உரியகட்டணத்தை மாடவட்ட கல்வி அழுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கவும்.

கட்டணம்:

விடைத்தாள் மறுகூட்டலுக்கு உரிய தொகை மாணவர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ் மாணவர்கள் மொழித்தாளுக்கு ரூபாய் 550 தொகை செலுத்த வேண்டும் . பிறப்பாடங்களுக்கு ரூபாய் 275 தொகை செலுத்த வேண்டும்.

மறுக்கூட்டலுக்கு உரிய கட்டணமாக மொழிப்பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு ரூபாய் 305 தொகையும் மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 205 தொகை செலுத்த வேண்டும்.

மாணவர்கள் தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள பள்ளி தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம். மாணவர்கள் அதனை பயன்படுத்தி உங்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளுங்கள்.

சார்ந்த பதவிகள்:

பத்து மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

 பிளஸ்2 மாணவர்களுக்கான துணைதேர்வு எழுத ஹால்டிக்கெட் பெறலாம் !!

English summary
here article tell about 10th and +2 supplementary exams results

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia