10ம் வகுப்பு கணிதத் தேர்வில் காப்பி.. 4 மாணவர்கள் பிடிபட்டனர்

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு கணிதத் தேர்வில் காப்பி அடித்து 4 மாணவர்கள் சிக்கினர். இதில் 3 பேர் தனித் தேர்வர்களாவர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 30ம் தேதி முடியும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று கணிதத்தேர்வினை பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதினார்கள்.

10ம் வகுப்பு கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ மாணவியர்கள் கூறினார்கள். 1 மார்க் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் 2 மார்க் கேள்விகளில் பல கேள்விகள் மற்றும் 5 மார்க் கேள்விகளில் கடைசியாக கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்தது என தெரிவித்துள்ளனர்.

கவலையில் மாணவர்கள்

கணிதப்பாடத்தில் அதிக மார்க் வாங்கினால்தான் 11ம் வகுப்பில் தொழில்முறைக் கல்விக்கான கோர்ஸ் எடுத்து படிக்க முடியும். கணிதம் அறிவியல் பாடங்கள் மிகவும் முக்கியமான பாடங்களாகும். கணிதத் தேர்வு கடினமாக அமைந்ததால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.

காப்பி அடித்த 4 பேர்

இந்த நிலையில், கணிதத்தேர்வில் 4 மாணவர்கள் காப்பியடித்து மாட்டிக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 2 தனித்தேர்வாளர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த தனித்தேர்வாளர் ஒருவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பள்ளி மாணவரும் பார்த்து எழுதியதற்காக பிடிபட்டார்.

பாஸாக காப்பி

நன்றாகப் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நிறைய மார்க் எடுக்க வேண்டும். சென்ட்டம் வாங்க வேண்டும் என்று கவலை. அதேசமயம், சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு பாஸ் ஆகனும்னு கவலை. இவர்கள்தான் காப்பி அடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தடை வரும்

காப்பியடித்து மாட்டிக்கொண்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும். அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளா்.

English summary
Director of government examinations Vasunthara Devi has said that 4 SSLC students were caught copying in their Maths exam yesterday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia