10, 12ம் வகுப்பு மாணவர்கள்... பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுசெய்ய ஏற்பாடு!

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிகளிலேயே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

15 நாட்கள் பதிவு

அது போலவே இந்த ஆண்டும் (2017) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு மூப்பு நாள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 12ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படும் நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு பதிவு

2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு

மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2016) வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
From this year onwards students those who passed in 12th standard may register their qualification in employment exchange online from their respective school itself where they completed their studies.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia