1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புரமோஷன்!

Posted By:

சென்னை: ஆசிரியர்களுக்காக நடைபெற்று வரும் கவுன்சிலிங்கிலல் தமிழகம் முழுவதுமாக மொத்தம் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல்- பதவி உயர்வு கவுன்சிலிங் கடந்த 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புரமோஷன்!

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் -பதவி உயர்வு கவுன்சிலிங், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் - பதவி உயர்வு கவுன்சிலிங், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் ஆகியவை தற்போது நிறைவு பெற்றுள்ளன.

இந்த நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. இதில் 542 பேருக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. அவர்கள் கேட்ட இடங்களை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக புரமோஷனையும் கொடுத்துள்ளது கல்வித்துறை. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுடைய பதவி உயர்வால் அவர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கவிருப்பதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Scgool Education department has given promotion to 1042 Graduate Teachers and they are now in Senior Graduate Teachers position.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia