டீச்சருக்கு படிச்சு இருக்கீங்களா...! நல்ல செய்தி சொல்லியிருக்காரு அமைச்சரு ...!

டீச்சருக்கு படிச்சுட்டு, அதற்குரிய தேர்வு எப்போ நடக்கும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்குறவங்களுக்கு; ஓராண்டாக மகிழ்ச்சியான செய்தி தான் வந்த வண்ணம் இருக்குது...! வாய்ப்புகள் கதவை தட்டுது; ஆனா நாம தான் தேர்வை நல்லா எழுதனும்...!

 

என்ன மகிழ்ச்சியான அறிவிப்பு என்பதை சொல்லுறேன்; நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க...!
அதாவது, கொரோனா தாக்கத்துக்கு பின், கடந்த ஓராண்டாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திங்கோ...!

கூடுதல் மாணவர்கள் சேர்கையால், அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

ஆகையால், புதிய ஆசிரியர்கள் நியமன நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது, தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை.
கடந்த இரு நாள்களுக்கு முன், சேலம் மாவட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றார்.

 

அங்குள்ள பள்ளிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம், "தமிழகம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்களை இடித்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் தற்போது 10 ஆயிரத்து 31 பள்ளிகள் பழுதடைந்துள்ளன.இக்கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்தாண்டுக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவர்கள் நியமனம்
மாநிலத்தில் பள்ளி-மாணவ மாணவிகளுக்கு மனநலம் மற்றும் உடல் நலம் கண்காணித்து உரிய அறிவுரைகள் வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவர்கள் மாணவ-மாணவிகளை சந்திப்பர். இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி விடுமுறை மிகவும் அவசியமானது.

அப்போது தான் அவர்கள் அழுத்தம் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பா். இதனால் தனியார் பள்ளி நிர்வாகம் விடுமுறை நாட்களில் மாணவ மாணவிகளை அழைத்து வகுப்புகள் நடத்தக் கூடாது.

திரைப்படம் திரையிட முடிவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கான திரைப்படம் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களுக்கு கட்டு தரவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திங்கோ...!

10 ஆயிரம் பேர்

பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

பள்ளிகளில் தற்போது மாணவ மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தேவை பூர்த்தி செய்ய நடப்பாண்டில் 10,300 ஆசிரியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

உண்மையிலேயே உங்களுக்கு, இந்த அறிவிப்பு சந்தோஷம், குஷிய ஏற்படுத்தியிருக்கோம் தானே...! அப்ப உடனே இப்பவே தேர்வுக்கு தயாராகுங்க...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
In the next five years, the Tamil Nadu government's school education department has started the work of appointing more than 10 thousand teachers, the minister of the department Anbil Mahesh Poiyamozhi has made a happy announcement.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X