அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் புதுமை... 10 ஆசிரியர்கள் தேர்வு

Posted By: Jayanthi

சென்னை: கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக 10 ஆசிரியர்களை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் தேர்வு செய்துள்ளது.

இந்த ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை இணைய தளத்தில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கற்பிக்கும் போது அதில் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிப்பதும், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் புதுமை... 10 ஆசிரியர்கள் தேர்வு

அதன்படி கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணைய தளத்தில் வீடியோவாக வெளியிட முடிவு செய்துள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் 1526 ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளை விளக்கி மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்துக்கு அனுப்பினர். கற்றலில் புதுமையை புகுத்திய 100 ஆசிரியர்கள் அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 75 ஆசிரியர்களின் கற்பித்தலை வீடியோ எடுக்கும் பணி நடக்கிறது. அவை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதைப் பார்த்து மற்ற ஆசிரியர்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது.

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்ரமேரூர், நெல்லிக்குப்பம், ஓனம்பாக்கம், குருவிமலை, கருநிலம், கொளத்தூர், ஆத்தனஞ்சேரி, மதுரமங்கலம் ஆகிய 10 அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 8 ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் பதிவு செய்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் மற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை பதிவு செய்து விடும் என்றும் தெரிகிறது.

English summary
The Directorate of state education research and training has selected 10 teachers for introducing innovations in teaching in govt schools.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia