கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்.. 10,039 காலிப்பணியிடங்கள்.. நிரப்பக் கோரிக்கை

Posted By:

சென்னை ; கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைப்பு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10, 039 ஆசிரியர் காலிப் பணியிடங்களும், ஆசிரியர் பணியைத் தவிர உள்ள மற்றப் பணிகளுக்கு 14,114 காலியிடங்களும் நிரப்பப்படமால் உள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை பயிற்றுவிக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்புகள் தங்கள் பள்ளியில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி கோரிக்கை வைத்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடுமுழுவதும் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்றான கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்புகள் தங்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்ப்பணி மற்றும் ஆசிரியர்ப்பணி அல்லாத மற்றப் பணிகளுக்கும் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்

மேலும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கான பரிந்துரைக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைசெய்திருந்தது. இதையடுத்து, இந்தப் பரிந்துரைக்கு தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

 

மாநில அரசுடன் ஆலோசனை

இந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, குடியரசுத்தலைவரின் ஆணையில் கூறப்பட்டுள்ளது.

மும்மொழிப்பாடத் திட்டம்

இந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆணையில் கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கடந்த ஆண்டு மும்மொழிப் பாடத்திட்டத்தை 10-ம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
10,039 teaching posts including TGTs, PGTs and PRTs are also vacant in Kendriya Vidyalayas besides 14,144 non-teaching posts”, the report said. There are 1,142 functioning KVs globally, including three abroad in Moscow, Kathmandu and Tehran in Russia, Nepal and Iran respectively.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia