என்ஜீனியரிங் படிப்புக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 விண்ணப்பங்கள் பதிவு!

Posted By:

சென்னை : இந்த வருடம் என்ஜீனியரிங் படிப்பிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவ மாணவிகள் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை. நீட் தேர்வி அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர்கள் என்ஜீனியரிங் படிப்பை விட்டு விட்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அதனால் இன்னும் என்ஜீனியரிங் படிப்பிற்கான சேர்க்கை எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

என்ஜீனியரிங் படிப்புக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 விண்ணப்பங்கள் பதிவு!

தமிழகத்தில் உள்ள என்ஜீனியரிங் கல்லூரிகளில் பி.இ. சேர்ந்து படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு என்ஜீனியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க கடந்த மே மாதம் 1ந் தேதி முதல் மாணவ மாணவிகள் ஆன்லைனில் பதிவு செய்தனர்.

அவர்கள் பதிவு செய்து பிளஸ்2 மதிப்பெண்களை நிரப்பி அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதற்கான கடைசி நாள் கடந்த 3ந் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பங்களை தினமும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் எண்ணி வந்தனர். நேற்று இறுதியாக விண்ணப்பங்களை எண்ணி பார்த்தனர். 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 விண்ணப்பங்கள் வந்திருப்பது தெரிய வந்ததுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் குறைவாகவே விண்ணப்பித்துள்ளனர்.

English summary
This year 1 lakh 40 thousand and 451 students have been registered for engineering course at Anna University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia