மத்தியப் பல்கலைக்கழகங்களில் 1,310 பேராசிரியர் பணியிடங்கள் காலி!!

Posted By:

சென்னை: மத்தியப் பல்கலைக்கழகங்களில் 1,310 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் 1,310 பேராசிரியர் பணியிடங்கள் காலி!!

இத்தகவலை, ராஜ்யசபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக அளித்துள்ளார். அவர் தனது பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்தியப் பல்கலைக்கழங்களில் 1,310 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி, பல்கலைக்கழக நிர்வாகங்களை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை விரைவில் தொடங்கப்படும் என்றார் அவர்.

Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia