சாஸ்த்ரா பல்கலை. மாணவர்களுக்கு அடித்தது 'லக்' : 1,304 பேருக்கு டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் 1,304 பேருக்கு டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களாக டி.சி.எஸ். நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் வளாக நேர்காணலை (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்தின.

இதில் பங்கேற்ற மாணவர்களில் 1,304 பேர் டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு நல்ல ஊதியத்தைத் தருவதாக நிறுவனம் வாக்களித்துள்ளது.

சாஸ்த்ரா பல்கலை. மாணவர்களுக்கு அடித்தது 'லக்' : 1,304 பேருக்கு டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இதுதொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு) எஸ். வைத்திய சுப்பிரமணியம், பணியமர்த்தல் துறை இயக்குநர் வெ. பத்ரிநாத் கூறியதாவது:

டி.சி.எஸ். (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம் கடந்த 2 நாட்களாக கேம்பஸ் இன்டர்வியூவை நடத்தியது. இதில் 1,304 பேருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நம் நாட்டில் இதுவரை டி.சி.எஸ். நடத்திய வளாக நேர்காணலில் இதுவே மிகச் சிறந்தது என அறியப்படுகிறது. மேலும் பேபால், அமேசான், சோஹோ, பிரஷ்டெஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்றன. அந்த நிறுவனங்களில் சுமார் 350 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
இவர்களுடைய ஆண்டு சராசரி ஊதியம் ரூ. 6 லட்சமாகும்.

உற்பத்திப் பொருள் நிறுவனங்களில் சில மேலும் 9 மாணவர்களை ஆண்டுக்கு ரூ. 6.5 லட்ச ஊதியத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளன என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
1,304 students from Tanjore Sastra University has got job in the Campus interview which is conducted by the University authorities. 1,304 got jobs form TCS Company i the record mark in Sastra University,
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X