என்ஜினீயரிங் படிப்பிற்கு 1 1/4 லட்சம் மாணவர்கள் இதுவரை பதிவு.. 31 கடைசி நாள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பிற்கு இது வரை 1 1/4 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு 31ந் தேதி கடைசி நாளாகும்.

சென்னை : என்ஜினீயரிங் படிப்பிற்கு மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்த்தை பதிவு செய்ய 31ந் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவம் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து சேர ஜூன் 3ந் தேதி கடைசி நாளாகும்.

2017 - 2018ம் கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்வதற்கு எந்த வித நுழைவுத் தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கடந்த 12ந் தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தனர். சிலர் பிளஸ்2 தேர்வு முடிவு வெளிவந்த பிறகு ஆன்லைனில் மதிப்பெண்களை பதிந்தனர்.

  ஜூன் 3ந் தேதி கடைசி நாள்

ஜூன் 3ந் தேதி கடைசி நாள்

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணாபல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க அடுத்த மாதம் ஜூன் 3ந் தேதி கடைசி நாள். கடந்த ஆண்டு வரை விண்ணப்ப கட்டணம் டி.டி. எடுத்து அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வருடம் முதல் ஆன்-லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும. அவ்வாறு பலர் பணம் செலுத்தி வருகிறார்கள்.

பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய முகவரி

பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய முகவரி

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை - 600025, என்ற முகவரிக்கு அனுப்பி வருகிறார்கள். சிலர்தான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து அனுப்பி உள்ளனர்.

1 1/4 லட்சம் பேர் பதிவு

1 1/4 லட்சம் பேர் பதிவு

இதுவரை 1 1/4 லட்ச பேர் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இன்னும் பதிவு செய்ய 9 நாள்கள் இருக்கிறது. 31ந் தேதி தான் இறுதி நாள். இந்த தகவலை
என்ஜினீயரிங் மாணவர் சேர்கைகை செய்லாளர் பேராசிரியர் இந்துமதி தெரிவித்தார்.

 கலை அறிவியல் படிப்பு

கலை அறிவியல் படிப்பு

இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் தமிழநாடு கால்நடை மருத்துவ படிப்பில் சேரவும் கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேரவும் மாணவ மாணவிகளிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Up to 1,54 lakh students have been registered for engineering course at Anna University. Last date is 31st to apply.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+