1 லட்சம் மாணவர்கள் எழுதிய ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு.. !!

Posted By:

சென்னை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வை 1.08 லட்சம் மாணவர்கள் எழுதினர். புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு 150 இடங்களும், காரைக்கால் வளாகத்தில் 50 இடங்களும் என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. புதுச்சேரியில் உள்ள 150 இடங்களில் 40-ம், காரைக்காலில் உள்ள 50 இடங்களில் 14-ம் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

1 லட்சம் மாணவர்கள் எழுதிய ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு.. !!

இதற்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 75 நகரங்களில் 250 மையங்களில் காலை, மாலை என இரு வேளைகளாக இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் மட்டும் 9 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுக்காக மொத்தம் 1,55,193 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் புதுவையில் மட்டும் 3,098 பேர் தேர்வு எழுதினர். காலையில் தேர்வு எழுத 82 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்த நிலையில், 59 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

மாலையில் தேர்வு எழுத 73 ஆயிரம் பேர் பதிவு செய்த நிலையில், 49 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் தேர்வு எழுதியவர்கள் 70 சதவீதம் ஆகும். மொத்தம் 1.08 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வில் வெற்றி பெறுவோருக்கான கவுன்சிலிங், ஜூன் 20 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும். வகுப்புகள் அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்கும் என ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
1.08 Lakh has wirtten the Puduchery JIPMER Medical Entrance exams today in Various centre. The Entrance exams results will be announced on June 13.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia