உதவித்தொகையுடன் ஓராண்டு பட்டயப்படிப்பு படிக்க விருப்பமா...!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உதவித்தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்பை வழங்குகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரம் வேண்டுவோர் 044-22542992 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் களப்பணி மூலம் ஏராளமான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உதவித்தொகையுடன் இங்கு ஓராண்டு பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இப்பட்டயப் படிப்பை தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3000- உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.

உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அழைக்கிறது..!!

இப்பட்டயப் படிப்புக்கான விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.3,200ஆகும். கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து இதில் வாட்சப் எண் குறிப்பிட்டு, Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாக படித்த கல்வி சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகல்களை இணைத்து, ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏப்ரல் 12-ம் தேதி காலை 11 மணிக்கு எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர், வாரத்தில் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 தொலைபேசி 044-22542992 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

தகுதியுள்ள மாணவர்கள் இந்தப் படிப்புக்கு உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
World Tamil research centre has invited applications for the course of one year Diploma. For more details please login into www.ulakaththamizh.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+