இந்தியவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் முன்னணி நிறுவனமாக விளங்கும் விப்ரோ (Wipro) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கு தற்போது அசோசியேட் (Associate) பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் இருப்பது விப்ரோ நிறுவனமாகும். விப்ரோ லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.
விப்ரோ 2011-ம் ஆண்டு வருவாய் தகவல்களின்படி இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உள்ளது;

2011-ம் ஆண்டு தகவல் சேவை வழங்குநர்கள் பட்டியலில் உலக அளவில் 31-வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் மூன்று பிரிவுகளில் செயல்படுகிறது: தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள், நுகர்வோர் சேவை மற்றும் விளக்குகள் ஆகிய பிரிவுகளில் இது செயல்பட்டு வருகிறது.
விப்ரோ நிறுவனம் டிசம்பர் 29, 1945 அன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மேற்கு இந்திய தயாரிப்புகள் லிமிடெட் எனும் பெயரில், முஹம்மது ஹசம் பிரேம்ஜி மூலம் தொடங்கப்பட்டது. பிறகு இதன் சுருக்கமாக விப்ரோ என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் காய்கறிகள் மூலம் நெய், வனஸ்பதி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகிய தயாரிப்புகளை மகாராஷ்டிர மாநிலம் ஜலகோன் மாவட்ட அம்ல்னர் என்னும் ஊரில் தயாரித்து வந்தது.
கிஸான் என்ற பெயரிலும், ஒட்டகம் மற்றும் சூரியகாந்தி பூவை குழுமச் சின்னமாக வைத்தது. அன்று முதல் இன்று வரை விப்ரோ தங்களது அனைத்து வியாபாரங்களிலும் சூரியகாந்திப் பூவையே குழுமச் சின்னமாக வைத்துள்ளது.
1966-ம் ஆண்டு, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது 21-வது வயதில் அசிம் பிரேம்ஜி, விப்ரோவின் தலைவராக பொறுப்பெற்றார். 175 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவையை விப்ரோ செய்கிறது.
2011 ஆம் ஆண்டு, எதிர்பார்த்த லாபத்தினை ஈட்டாததற்குக் காரணமாக தானே கொணர்ந்த இரட்டை நிர்வாக இயக்குநர் முறையைக் காரணம் காட்டினார் அசிம் பிரேம்ஜி. அதன் விளைவாக கிரிஷ் மற்றும் சுரேஷ் வாஷ்வானி எனும் இரு நிர்வாக இயக்குநர்களில் யாரேனும் ஒருவர் பதவி விலக வேண்டிய சூழலில், ஏற்கனவே பதவியேற்றபோது ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை என்று தாங்கள் கொண்ட கொள்கைப்படி இருவருமே விப்ரோவை விட்டு விலகினர்.அதன் பின்னர் டி கே குரியன் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்றார்.
இந்த நிறுவனம், 2004-ம் ஆண்டு கேரளாவை அடிப்படையாகக் கொண்ட சந்திரிகா சோப் நிறுவனத்தை வாங்கியது.
லண்டனின் யார்ட்லி (yardley) நிறுவனத்தின் சோப்பு,வாசனைத் திரவியங்கள் போன்ற பொருட்களின்ஆசிய, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் வியாபாரத்தை 2009 ஆம் ஆண்டு விப்ரோ வாங்கியது. சென்னையில் இதன் கிளை அலுவலகம் சோழிங்கநல்லூரில் பரந்து விரிந்து அமைந்துள்ளது.
இந்த பெருமைமிகு விப்ரோ நிறுவனத்தில்தான் தற்போது அசோசியேட் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த அசோசியேட் (Associate) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்த அசோசியேட் (Associate) தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு விப்ரோ (Wipro) நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ நிறுவன பணியிடத்துக்கு தகுதியானவர்கள் Skill Test(திறனறித் தேர்வு), நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்லனர்.
இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://careers.wipro.com/global-india/jobs/3039458?lang=en-us&previousLocale=en-US என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












