இந்திய வைல்டு லைப் இன்ஸ்டிடியூட்டில் வேலை!

Posted By: Kani

இந்திய வைல்டுலைப் இன்ஸ்டிடியூட்டில் காலியாக உள்ள புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணியிடங்களுக்கு 23 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ்

வயது வரம்பு: 28-34க்குள்.

கல்வித்தகுதி: வைல்டு லைப் சயின்ஸ, லைப் சயின்ஸஸ், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், பிஸரிஸ், என்விரான்மென்டல் சயின்ஸஸ், சோசியல் சயின்ஸஸ், எக்கனாமிக்ஸ், உயிரியல், வனவியல், வேளாண்மை போன்ற பிரிவுகளில் முதுநிலை படிப்புகள், பிஎச்.டி. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிடிஎப் பைலாக levl@wii.gov.in. என்ற மெயில் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு தேதி: 14-5-2018
நேர்காணலும் நடைபெறும் தேதி: 15-5-18, 16-5-2018
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-4-2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ள 'ரெக்யூர்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு 30-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
Wildlife Institute of India invites application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia