அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

ஒருங்கிணைந்த சிசு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை சார்பில் பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 15 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் காலியாக உள்ள 10 அங்கன்வாடி ஊழியர்கள், 20 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய சிசு மேம்பாட்டு திட்ட அதிகாரி அலுவலகம், பெங்களூரு (மாநில) திட்டம், முதல்மடை, பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு முதல் கட்டடம், குழந்தைபேறு மருத்துவமனை அருகில், என்.ஆர்.காலனி, பெங்களூரு-19 என்ற முகவரியில் அணுக வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












