புழல் சிறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : சென்னை மாவட்டம் புழல் சிறை 1-இல் காலியாக உள்ள சிற்ப எழுத்தர் பணி இடத்துக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, packing பணியில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துப்புரவுப் பணியாளர் பணி இடத்துக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரம்புக்குள் (அதிகபட்சமாக - எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. - 35, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 32, ஓ.சி-30) இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தினை சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை -1 (தண்டனை) புழல், சென்னை-66 (தொலைபேசி-044-26590615) என்ற முகவரிக்கு ஜூலை 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விண்ணப்பத்தினை ஜூன் 28 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூலை 10 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












