தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Posted By: Kani

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே-31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லோயர் டிவிஷன் கிளர்க் - 07

சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Secretary,
V.O.Chidambaranar Port Trust,
Tuticorin-626 004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்தது கொள்ளவும்.

English summary
VOC Port invites application for Lower Division Clerk

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia