பெருமைவாய்ந்த வி.ஐ.டி.யில் நுழைவுத்தேர்வு எழுதத் தயாரா...!!

வேலூர் மாவட்டத்தில் பெருமைவாய்ந்த வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் விஐடி உயர்கல்வி நிறுவனத்தில் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://viteee.vit.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அல்லது விஐடி பல்கலைக்கழகம் (VIT University) தமிழ் நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொறியியல் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும்.

ப்பல்கலைக்கழகத்தை தோற்றுவித்து, அதன் வேந்தராகவும் இருந்து வருபவர் ஜி.விசுவநாதன் ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சராவார்.

1984-ல் பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 2000 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது, பின்னர் 2001 இல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்வு கண்டது. செப்டம்பர் 2006ல் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(Vellore Institute of Technology) என்று பெயர் மாற்றப்பட்டது.

வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 1984 இல் வேலூர் இன்ஜீனியரிங் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர், 2001 இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதும் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்று மாற்றப்பட்டது. அதன் பின்னர், 2006 இல் யுனிவர்சிடி கிரென்ஸ் கமிஷெனின் படி வி.ஐ.டி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் அடைந்தது.

பெருமைவாய்ந்த வி.ஐ.டி.யில் நுழைவுத்தேர்வு எழுதத் தயாரா...!!

மாபெரும் புகழ் பெற்று விளங்கும் இப்பல்கலைகழகம் சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிக்கையால் நடத்தப்பட்ட இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற கருத்து கணிப்பில் 10வது இடம் பெற்றது.
இப்பல்கலைகழகத்தில் 18 இளங்கலை பாடபிரிவுகளும், 32 முதுகலை பாடபிரிவுகளும் உள்ளன.அது மட்டுமன்றி ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு பாடபிரிவுகளும் உள்ளன. இங்கு சுமார் 12,250 மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 8 கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. விளையாட்டு, கல்வி, கலை என அனைத்து துறைகளிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. கல்வி பயிலும் போதே எண்ணற்ற மாணவர்கள் தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களில் பணி பெறும் வாய்ப்படைகிறார்கள்.

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் கலை நிகழ்ச்சி ரிவேரா என அழைக்கப்படுகிறது. இவ்விழாவில் பங்குபெற பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். ரிவேராவின் போது எண்ணற்ற விளையாட்டு, நடனம், பாட்டு, எழுத்து, இசை மற்றும் புதிர் போட்டிகள் நடைபெறும். திரை பிறபலங்கள் பலர் வருகை தருவது இவ்விழாவின் மற்றோரு சிறப்பாகும்.

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இவைத் தவிர, மாணவர்களுக்கென 13 விடுதிகளும், மாணவிகளுக்கென 4 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து விடுதிகளிலும் விளையாட்டு மைதனங்கள் மற்றும் நீச்சல் குள வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தவிர, ஆண்டுதோறும் பல வழிகளில் மாணவர்களின் நன்மைக்காக பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த பெருமைவாய்ந்த வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உயர்கல்வி நிறுவனத்தில் தான் தற்போது பல்வேறு இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான வி.ஐ.டி.இ.இ.இ., எனும் நுழைவுத்தேர்வை எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வி.ஐ.டி.இ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தேர்வு முறை: இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து மொத்தம் 125 மல்ட்டிப்பில் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படுகின்றன

வி.ஐ.டி.இ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தேர்வு நேரம்:

வி.ஐ.டி.இ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தேர்வு நேரம் 150 நிமிடங்களாகும்.

வி.ஐ.டி.இ.இ.இ. நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான கடைசி நாள்:

இந்தத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மார்ச் மாதம் 30-ம் தேதியாகும்.

இணையதள முகவரி:

விஐடிஇஇஇ நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் கல்வித்தகுதி, விண்ணப்பங்களை டவுன்லோடு செய்தல், கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு https://viteee.vit.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
VITEEE 2024 Application Form has been released from 1st November 2023. VIT University conducts the Vellore Institute of Technology Engineering Entrance Exam (VITEEE). It is a university level entrance exam conducted for various UG engineering degree course. Interested candidates are able to get admission into various UG courses at VIT. The admission in B.Tech courses will be given in Vellore, Chennai, AP and Bhopal campuses. Candidates are able to appear for the exam by filing the application form through online mode.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+