விண்ணப்பித்துவிட்டீர்களா? விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: விருதுநகர்

காலியிடங்கள்: 6

பணி விவரம்:

1.மூத்த தொழிற்சாலை உதவியாளர்-02

2.தொழில்நுட்பவியலாளர் (ரெப்ரிஜிரேட்டர்)-02

3.தொழில்நுட்பவியலாளர் (எலெக்ட்ரிகல்)-01

4.ஓட்டுநர்-01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) குறிப்பிட்ட துறையில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.04.2018

விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு, பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

VIRUDHUNAGAR DCMPU,
Srivilliputtur Dairy,
Madurai Road,
Meenakshipuram(P.O),
Srivilliputtur - 626 125.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'எம்பிளாய்மென்ட் நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 20.04.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
Virudhunagar District Cooperative Milk Producers’ Union Ltd invite the application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia