நவம்பர் 22ம் தேதியன்று (நாளை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நவம்பர் 22ம் தேதியன்று (வெள்ளி) காலை 10 மணிக்கு முதல் பிற்பகல் 3 மணி வரையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப் படிப்பு முடித்தவர்கள் தங்களுடைய சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.
இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதால் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய 04146 226417 என்னும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.