தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், காலியாக உள்ள 2764 'குரூப் சி' 'சமூக பாதுகாப்பு உதவியாளர்' பணியிடங்களுக்கு, ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை, தேசிய தேர்வு முகமை தேர்வு வாயிலாக தேர்வு செய்யவுள்ளது.
நிர்வாகம்: தொழிலாளர் வருங்காவல் வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எஃப்.ஓ.,)
மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023
பணியிடங்கள் விவரங்கள்
Ø சமூக பாதுகாப்பு உதவியாளர் (Social Security Assistant)
பணியிடங்கள் எண்ணிக்கை: 2764(மாறுதலுக்கு உட்பட்டது)
விண்ணப்பிக்கும் முறை
Ø தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஏப்.,26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Ø 2764 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச்.,27 ஆம் தேதி தொடங்கி உள்ளது.
Ø தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியாகும் தேதி, தேர்வு நடக்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை, தேசிய தேர்வு முகமை பின்னர் அறிவிக்கும். அதிகாரப்பூர்வ
கல்வி தகுதி
சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். .
ஊதியம்:
பணிகளுக்கு, Level- 5 in the Pay Matrix படி, ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
எங்கு பணி
தேர்வாகும் நபர்கள் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
வயது வரம்பு/ தேர்வு முறை:
Ø விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø வயது வரம்பில் உள்ள அரசு விதிகளின் படி, இட ஒதுக்கீடு வழங்கப்படும். இருப்பினும், விவரங்களை விரிவாக அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Ø சமூக நல அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), கணினி திறனறிவு தேர்வில் (Computer Skill test) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
Ø மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு இருக்கும்.
Ø எழுத்துத் தேர்வில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும்.
Ø எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தப்படும்.
Ø விண்ணப்பதாரர்களின் வசதிக்கு ஏற்ப தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023
நோட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்...!
எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- இல் வெளியிடப்படும்.
ஊதிய விவரம், கல்வித் தகுதி, தேர்வு நடக்கும் நாள் உள்ளிட்டவைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு...
https://recruitment.nta.nic.in/EPFORecruitment/Page/Page?PageId=1&LangId=P
https://www.upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!
காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!
https://recruitment.nta.nic.in/EPFORecruitment/File/ViewFile?FileId=2&LangId=P


Click it and Unblock the Notifications












