உங்களுக்கு சுருக்கெழுத்து தெரிஞ்சா... மத்திய அரசு வேலை நிச்சயம்...!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், காலியாக உள்ள 185 'குரூப் சி' 'ஸ்டெனோகிராபர்' பணியிடங்களுக்கு, ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை, இப்பணியிடங்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.

நிர்வாகம்: தொழிலாளர் வருங்காவல் வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எஃப்.ஓ.,)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023

உங்களுக்கு ட்ரான்ஸ்க்ரைப் தெரியும்?

பணியிடங்கள் விவரங்கள்

· சுருக்கெழுத்தர் (Stenographer)

பணியிடங்கள் எண்ணிக்கை: 185

விண்ணப்பிக்கும் முறை

Ø தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஏப்.,26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Ø 185 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச்.,27 ஆம் தேதி தொடங்கி உள்ளது.

Ø தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியாகும் தேதியை, தேசிய தேர்வு முகமை பின்னர் அறிவிக்கும்.

கல்வி தகுதி

Ø காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Ø 'கம்ப்யூட்டரில் ட்ரான்ஸ்கிரைப்' செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

பணிகளுக்கு, Level- 4 in the Pay Matrix படி, ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

எங்கு பணி:

தேர்வாகும் நபர்கள் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.

வயது வரம்பு/ தேர்வு முறை

Ø விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Ø வயது வரம்பில் உள்ள அரசு விதிகளின் படி, இட ஒதுக்கீடு வழங்கப்படும். இருப்பினும், விபரங்களை விரிவாக அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ø ஆன்லைன் எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண் வழங்கப்படும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும்.

Ø மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு இருக்கும். இதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் திறனறிவு தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Ø பத்து நிமிட டிக்டேட்சன் தேர்வு நடத்தப்படும். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் கம்யூட்டரில் டைப் செய்ய வேண்டும். இதோடு 'Transcription' தேர்வு நடைபெறும்.

Ø விண்ணப்பதாரர்களின் வசதிக்கு ஏற்ப தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.04.2023

நோட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்...!

எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.upsc.gov.in/- இல் வெளியிடப்படும்.

ஊதிய விவரம், கல்வித் தகுதி, தேர்வு நடக்கும் நாள் உள்ளிட்டவைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு...

https://recruitment.nta.nic.in/EPFORecruitment/Page/Page?PageId=1&LangId=

https://www.upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!

காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cms.ecounselling.nic.in/CMSAdmin/Handler/FileHandler.ashx?B=128&A=245&F=3&L=P

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
EPFO Group C Notification 2023: Employees' Provident Fund Organization (Employees' Provident Fund Organization) invites applications from eligible candidates for the vacant posts of 'Stenographer' through online mode.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+