இன்ஜினியரிங் படித்து முடித்த மாணவர்களுக்காக மத்திய அரசு வேலை காத்திருக்கிறது. இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் அமர வாய்ப்பு உள்ளதாக மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) தகவல் வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த சிறப்புவாய்ந்த யுபிஎஸ்சி சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் 5 (வேதியியல் 1, ஆங்கிலம் 1, கணிதம் 1, இயற்பியல் 1, ஹிந்தி 1), பயிற்சி அதிகாரி 4 பேர், உதவி இயக்குனர் ஒருவர், துணை கமிஷனர் 2 பேர், துணை இயக்குனர் ஒருவர், அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் 2 பேர், சீனியர் ரிசர்ச் ஆபீஸர் 2 பேர் என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.
யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: யுபிஎஸ்சி-யின் உதவி பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டம், நெட் அல்லது செட் தேர்வு தேர்ச்சி, பயிற்சி அதிகாரி பணிக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டியது அவசியமாகும்

யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 16.5.2024 அடிப்படையில் உதவி பேராசிரியர் 35, பயிற்சி அதிகாரி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு. மற்ற பணிக்கு, பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும்.
யுபிஎஸ்சி பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ. 25 செலுத்தவேண்டும். எஸ்.சி./ எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 16.5.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












