இன்ஜினியரிங் பணிகளுக்கான யூபிஎஸ்சி பணிவாய்ப்பு

Posted By:

யூபிஎஸ்சி நடத்தும் இன்ஜினியரிங் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் இன்ஜினியரிங் பணிகளுக்கான தேர்வு நடத்துகிறது, வருடம் தோறும் மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இத்தேர்வுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

யூபிஎஸ்சி பணிவாய்ப்பு இன்ஜினியரிங் பணியை நிரப்ப அறிவிப்பு

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் பொறியியல் தேர்வானது சிவில் , மெக்கானிக், எலக்டிரானிகஸ், டெலி கம்யூனிகேசன் போன்ற துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  மொத்தம் 588 காலியிடங்கள் நிரப்பபடுகின்றன. விதிகளின்படி சம்பளத்தொகை பெறலாம். தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

யூபிஎஸ்சியின் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதியானது சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

யூபிஎஸ்சியின் தேர்வுக்கு விண்ணப்பிக்க 21 முதல் 30க்குள் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு தளர்வானது பிரிவுகளுக்கேற்ப மாறுபடும் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான தேர்வானது முதண்மை எழுத்து மற்றும் முக்கிய தேர்வு அத்துடன் நேரடி தேர்வு மூன்று நிலைகளை கடக்க வேண்டும் . இந்தியா முழுவதும் பணியிடங்களை கொண்ட பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி அக்டோபர் 23 ஆகும்.

யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி, மாற்றுதிறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .

யூபிஎஸ்சி தேர்வில் விண்ணப்பிக்க இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . அத்துடன் அதிகாரப்பூர்வ தளத்தையும் இங்கு இணைத்துள்ளோம் . யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையும் இங்கு இணைத்துள்ளோம் . தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள்:

எஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு 

 டேன்ஜெட்கோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 

இந்து பனராஸ் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும் !!

English summary
here article tell about job opportunity of upsc for Engineering

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia