மத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28-6-2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணி: விமான போக்குவரத்து துறை, ஓவியம், சிற்பம், பெயிண்டிங் சார்ந்த துறையில் உதவி பேராசிரியர் பணிகள், வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் உதவி இயக்குநர் (அனிமல் ஹஸ்பண்டரி), லைவ் ஸ்டாக் ஆபீசர், நேவல் ஆர்கிடெக்சர் உள்ளிட்ட பணிகளுக்கு 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி: வெட்னரி சயின்ஸ், அக்ரிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, நேவல் ஆர்கிடெக்சர் மற்றும் சட்டப் படிப்புகள், சிவில், ஆர்கிடெக்சர் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணியிடங்களுக்கு முதுநிலை படிப்பு அவசியம்.
ஏர்ஒர்த்னெஸ் அதிகாரி பணிக்கு, பி.எஸ்சி. இயற்பியல், கணிதம், ஏர்கிராப்ட் மெயின்டனென்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 1-1-2018-ந் தேதியில் 53 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-6-2018.
மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து யூபிஎஸ்சி இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


Click it and Unblock the Notifications












